கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை
கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை
Published on

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 100 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் விரை விலைபோனது.

இந்த நிலையில் நேற்று கூடிய வழக்கமான சந்தைக்கு 300 எருமை மாடுகளும், 350 பசு மாடுகளும் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.27 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.63 ஆயிரம் வரையும் விலைபோனது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். நேற்று 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com