96.26 லட்சம் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

92.26 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
96.26 லட்சம் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் - அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on

சென்னை,

92.26 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியம் மின்நுகர்வோர் தங்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இதுவரை ( நேற்று வரை ) 92.26 லட்சம் மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பதிவில், இன்று (நேற்று) வரை 92.26 லட்சம் மின்நுகர்வோர் சிறப்பு முகாம் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் மின்இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com