குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பம்; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

இன்றைய நிலவரப்படி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பம்; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Published on: 

சென்னை,

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆகும்.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியிட்டது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றாலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆகும். எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் நவம்பர் 5-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.குரூப்-4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது.

X