ராணிப்பேட்டை மாவட்டத்தில் 99 சதவீத பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 99 சதவீத பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 99 சதவீத பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த பிரச்சினையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி பள்ளிக்கூட பஸ்களுக்கு தீவைத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்தும் தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும் பள்ளிகள் இயங்காது என கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அதுபோன்று பள்ளிகளை மூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 67 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், 65 மாநில கல்வித்திட்ட பள்ளிகளும், 116 நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளும், 26 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. 2 மெட்ரிக் பள்ளிகள் மட்டும் இயங்கவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com