992 மாணவ-மாணவிகள் இந்தி தேர்வு எழுதினர்

திண்டுக்கல்லில் 992 மாணவ-மாணவிகள் இந்தி தேர்வு எழுதினர்.
992 மாணவ-மாணவிகள் இந்தி தேர்வு எழுதினர்
Published on

திண்டுக்கல்லில் தக்சன்பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இந்தி தேர்வு நடத்தப்பட்டது. திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளியில் இந்த தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிராத்மிக், மத்தியமா, ராசர்பாட்ஷா ஆகிய பிரிவுகளில் படித்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுத திண்டுக்கல்லில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து 992 பேர் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்து தேர்வை எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com