

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் சேந்தான்கரையை சேர்ந்தவர் பொன்னையன். இவருக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.