விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று காலை வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது வேர்க்கடலை செடிகளுக்கு இடையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்ட தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டனர்.

உடனடியாக இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பேரணாம்பட்டு வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள நாய்க்கனேரி காப்புக்காட்டில் விட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com