15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
Published on

நடுகல்

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் புதுப்பேட்டை பகுதியில் நடைபெற்று வருகிறது. 4-வது நாளான நேற்று நாட்டுநலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் புதுப்பேட்டை அருகே உள்ள காட்டூர் ஏரி கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்பேது அங்கு நடுகல் ஒன்று இருப்பதை மாணவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக இதுகுறித்து கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தெடர்ந்து அவரும், தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் க.மேகன் காந்தி, மதன்குமார், வரலாற்று ஆர்வலர் காணி நிலம் மு.முனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி அன்பழகன், திட்ட அலுவலர் ப. நரசிம்மன் ஆகியேர் சென்று நடுகல்லைபாவையிட்டனர்.

பின்னர் நடுகல் குறித்து பேராசிரியர் மேகன்காந்தி கூறியதாவது:-

15-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது

இந்த நடுகல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர காலத்து நடுகல் ஆகும். 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கெண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக வீரனின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வீரன் வைத்துள்ளான். வாரி முடிக்கப்பட்ட மேற்கெண்டை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இடையில் இடைக்கச்சுடனும், காதுகளில் குண்டலங்களுடனும் வீரன் சித்தரிக்கப்பட்டுள்ளான்.

15-ஆம் நூற்றாண்டில் நடந்த பேரில் வீர மரணம் அடைந்த வீரனின் பேர் ஆற்றலை இந்நடுகல் வெளிப்படுத்துகிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com