சென்னையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 16 அடி நீள டால்பின்

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 16 அடி நீளம் கொண்ட டால்பின் இறந்த நிலையில் ஒதுங்கியது.
சென்னையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 16 அடி நீள டால்பின்
Published on

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இன்று மதியம் இறந்த நிலையில் சுமார16 அடி நீளம் கொண்ட அரிய வகை பெண் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. அப்போது கடற்கரை பகுதியில் இருந்த பொதுமக்கள், பட்டினப்பாக்கம் காவல் துறையினர் மற்றும் கிண்டி சரக வனத் துறையினர் ஆகியோருக்கு தகவல் தெரித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், இறந்த டால்பினின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொடர்ந்து உடற்கூறாய்வு செய்த பின், டால்பினின் உடல், கடல் மணற்பரப்பில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com