17 வயது மாணவருக்கு காதல் தொல்லை...19 வயது இளம்பெண்ணின் அட்டகாச லீலை

பள்ளியில் படிக்கும்போதே மாணவரும், இளம்பெண்ணும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
17 வயது மாணவருக்கு காதல் தொல்லை...19 வயது இளம்பெண்ணின் அட்டகாச லீலை
Published on

சென்னை,

கோடம்பாக்த்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் போரூரை சேர்ந்த என் ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த மாணவி, மாணவருடன் நெருங்கி பழகி வந்தார். மேலும் ஆசை வார்த்தை கூறி காதல் வலை வீசி கடும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவரின் தாய் மாணவிக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி கண்டித்தார். ஆனாலும் மாணவி தொடர்ந்து மாணவருக்கு காதல் நெருக்கடி கொடுத்து செல்போனிலும் ஆபசமாக பேசி தனது அட்டகாச லீலையை தொடர்ந்து வந்தார்.

இளம்பெண்ணின் காதல் வலையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று மாணவர் இரவு பகலும் தவித்து வந்தார். ஒரு கட்டத்தில் இது பற்றி மாணவர் தனது தாயாரிடம் தெரிவித்துவிட்டார். இனிமேலும் அந்த இளம்பெண்ணை சும்மாவிடக்கூடாது என்று வெகுண்ட மாணவரின் தாயார் இது குறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில் மாணவி மற்றும் அவரது தாயின் பெயரை குறிப்பிட்டு உள்ளார். இதனையடுத்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண் மற்றும் அவரது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பள்ளியில் படிக்கும்போதே மாணவரும், மாணவியும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவரின் தாயார் சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com