வண்டலூர் உயிரியல் பூங்கா: உடல் நலக் குறைவால் 19 வயது ஆண் வரிக் கழுதைப்புலி உயிரிழப்பு..!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நலக் குறைவால் 19 வயதுடைய ஆண் வரிக் கழுதைப்புலி உயிரிழந்தது.
வண்டலூர் உயிரியல் பூங்கா: உடல் நலக் குறைவால் 19 வயது ஆண் வரிக் கழுதைப்புலி உயிரிழப்பு..!
Published on

வண்டலூர்:

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பூங்காவை தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதான 'வெங்கட்' என்ற ஆண் வரிக் கழுதைப்புலி கடந்த 2 மாத காலமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்தது. பூங்கா கால்நடை மருத்துவர்களால் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு செயலிழந்த காரணத்தால் இன்று பரிதாபமாக உயிரிழந்து.

இதனையடுத்து உயிரிழந்த வரிக்கழுதைப்புலியின் உடலை பூங்கா மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள நவீன எரியூட்டு மையத்தில் தகனம் செய்தனர்.

உடல் நலக்குறைவால் வரிக்கழுதைப்புலி உயிரிழந்ததை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் ஏற்படாதவாறு தொடர்ந்து பூங்கா மருத்துவர்கள் அனைத்து விலங்குகளையும் 24 மணி நேரமும் ஊழியர்கள் மூலம் கண்காணிப்பு வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிங்கங்கள் உயிரிழந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பூங்காவில் தொடர்ந்து சிங்கம், புலி, சிறுத்தை, வரி குதிரை, சாம்பார் மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்பட பல்வேறு விலங்குகள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com