பண்ணை வீட்டில் கார் மோதி 2 வயது குழந்தை பலி

பண்ணை வீட்டில் கார் மோதி 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
பண்ணை வீட்டில் கார் மோதி 2 வயது குழந்தை பலி
Published on

வாலாஜாபாத் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசங்கர். திருமண மண்டப உரிமையாளரான இவருக்கு சொந்தமாக வாலாஜாபாத் அடுத்த கிதிரிப்பேட்டை கிராமத்தில் பண்ணை நிலம் மற்றும் பண்ணை வீடு உள்ளது.

இந்த பண்ணை நிலத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 32) என்பவர் தன்னுடைய மனைவி கன்னியம்மாள் (25), 8 வயது மகன் வேலு மற்றும் 2 வயது மகள் காவியா ஆகியோருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

துரைசங்கர் பண்ணை நிலத்தை சுற்றி பார்பதற்காக தனது காரில் கிதிரிப்பேட்டை பண்ணை வீட்டுக்கு சென்றார். பின்னர் காரில் ஏறி வெளியே புறப்பட்டார். அப்போது அங்கு குழந்தை விளையாடிக்கொண்டு இருப்பதை அவர் கவனிக்கவில்லை.

கார் புறப்பட்டதும் அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை காவியா, எதிர்பாராத விதமாக காருக்கு அடியில் சிக்கிக்கொண்டாள். கார் சக்கரத்தில் சிக்கிய குழந்தை அதே இடத்தில் உடல் நசுங்கி சம்பவ பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் உடலை பார்த்து கணவன்-மனைவி இருவரும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com