தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவுதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஷாலினி (வயது 2). நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது வாசலில் இருந்த மழை நீர் தேங்கியுள்ள தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்துவிட்டது.

தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தை ஷாலினி, ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபார்க்க பரிதாபமாக இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்துவந்த கூடுவாஞ்சேரி போலீசார், பலியான குழந்தை ஷாலினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com