தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

ஊத்தங்கரை அருகே தண்ணீர் தாட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலியானான்.
தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி
Published on

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை அருகே தண்ணீர் தாட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலியானான்.

2 வயது குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மனைவி அகிலா. இந்த தம்பதியின் 2 வயது மகன் சுதர்சன்.

இவர்களது பக்கத்து வீட்டில் வெளிப்பகுதியில் திறந்தவெளியில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி அருகில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

தொட்டியில் மூழ்கி பலி

அப்போது திடீரென குழந்தை அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. பின்னர் குழந்தையின் உடலை வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்று விட்டனர்.

சோகம்

இதுபற்றி தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றேரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலியான சம்பவம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com