கடலூர் முதுநகர் அருகே வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு

கடலூர் முதுநகர் அருகே வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிழந்தது.
கடலூர் முதுநகர் அருகே வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு
Published on

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அடுத்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கொத்தனார். இவருடைய மகன் கவினேஷ்(வயது 2). சம்பவத்தன்று கவினேஷ், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகில் பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீரில் குழந்தை கவினேஷ், தவறி விழுந்தான்.

இதில் அந்த குழந்தை வலியால் அலறித்துடித்தது. இந்த சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் குழந்தை கவினேசை மீட்டு சிகிச்சைககாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை கவினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com