2 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சைல்ட் லைனில் (1098) புகார் தெரிவித்துள்ளார்.
2 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை
Published on: 

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தில் 2 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டிக்கேட்க சென்ற குழந்தையின் தந்தையை, சிறுவனின் தந்தை தாக்கியுள்ளார்.

பாலியல் தொல்லை

வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை வீட்டில் இருந்துள்ளது. நேற்று அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளான். தண்ணீர் குடித்துவிட்டு வீட்டில் இருந்த குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தபோது. குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்

இதை அறிந்த குழந்தையின் தாய் அந்த சிறுவனை கண்டித்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். சென்னையில் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்த தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை தாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று காலையில் சிறுவனின் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை கேட்டபோது, சிறுவனும் அவருடைய பெற்றோரும் குழந்தையின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.

குழந்தையின் தந்தை புகார்

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சைல்ட் லைனில் (1098) புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை, தாய் மற்றும் குழந்தை ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X