அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரியால் பெரும் பாதிப்பு வரலாம்

அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் என வணிக வட்டாரத்தினர் கூறினர்.
அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரியால் பெரும் பாதிப்பு வரலாம்
Published on

அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் என வணிக வட்டாரத்தினர் கூறினர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

மத்திய அரசு சமீபத்தில் அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்ததை தொடர்ந்து அரிசி விலை உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக பாசுமதி ரக அரிசியை தவிர மற்ற அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி வதித்துள்ளது. இதுபற்றி அரிசி ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:-

அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்துள்ளதால் அரிசி ஏற்றுமதி வெகுவாக பாதிக்கும். மேலும் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம் உள்ள நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 2.19 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பெரும் பாதிப்பு

ஆனால் மத்திய அரசின் வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 28 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாது. இது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சில்லறை விற்பனை பொருட்களின் பணவீக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரிசி, குருணை ஏற்றுமதிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் நடப்பாண்டில் அரிசி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பில்தான் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு வரிவிதித்துள்ளது என்று தெரிவித்த வணிக வட்டாரத்தினர், பாசுமதி ரக அரிசி சாகுபடி பரப்பளவு குறைந்துள்ள நிலையிலும் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாதது ஏன்? என்று தெரியவில்லை என கூறினர். சமீபத்தில் சாகுபடி பாதிப்பால் கோதுமை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com