விருத்தாசலம் அருகே 3 மாத குழந்தை திடீர் சாவு

விருத்தாசலம் அருகே 3 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே 3 மாத குழந்தை திடீர் சாவு
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே ரூபநாராயணநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 24). இவருடைய மனைவி அன்பரசி. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அன்பரசிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு சபரிவாசன் என்று பெயர் சூட்டியிருந்தனா.

இந்த நிலையில் நேற்று  இரவு தாய் அன்பரசி குழந்தை சபரிவாசனுக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்திருந்தார்.காலை எழுந்து பார்த்தபோது, குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சபரிவாசனை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 3 மாத குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com