வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு
Published on

வேலூர் சத்துவாச்சாரி 2-ம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய வீட்டிற்குள் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட விவேகானந்தன் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போக்குவரத்து நிலைய அலுவலர் செல்வமூர்த்தி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று சிறிதுநேர தேடுதலுக்கு பின்னர் இரும்பு கம்பியால் லாவகமாக பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டனர். பின்னர் அதனை வேலூர் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com