மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

வழி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
Published on

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நன்னை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி பார்வதி (வயது 60). இவர் நேற்று முன்தினம் மதியம் பெருமத்தூர் சாலையில் உள்ள தனது நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பார்வதியிடம் வழி கேட்பது போல் நடித்து, அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி பார்வதி அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com