கும்மிடிப்பூண்டியில் 7 வயது சிறுமி யோகாவில் சாதனை

கும்மிடிப்பூண்டியில் 7 வயது சிறுமி யோகாவில் உலக சாதனை படைத்தார்.
கும்மிடிப்பூண்டியில் 7 வயது சிறுமி யோகாவில் சாதனை
Published on

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அரசு, ஷோபனா தம்பதியரின் மகள் ஷாக்ஷிதா. 7 வயதான இவர் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கண்டபேருண்டாசனம் என்னும் யோகாசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில், 25 முறை சுழன்று உலக சாதனை படைத்தார்.

இவரது சாதனை, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', 'வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', 'அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து உள்ளது. சாதனை படைத்த சிறுமி ஷாக் ஷிதாவை யோகா பயிற்சியாளர் சந்தியா உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தாஜன் சிறுமியை நேரில் அழைத்து பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com