மயானத்தை மரகத சோலையாக மாற்றிய 70 வயது முதியவர்: நேரில் அழைத்து பாராட்டிய தலைமைச்செயலாளர் இறையன்பு

கடலூர் அருகே மயானத்தில் மரங்களை நட்டு, மரகதச் சோலையாக மாற்றிய 70 வயது முதியரை தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் அழைத்து பாராட்டினார்.
மயானத்தை மரகத சோலையாக மாற்றிய 70 வயது முதியவர்: நேரில் அழைத்து பாராட்டிய தலைமைச்செயலாளர் இறையன்பு
Published on

சென்னை,

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் பழ மரங்களும் நடப்பட்டு இருப்பதைப் பற்றி மாவட்ட கலெக்டர் அறிக்கை அனுப்பியிருந்தார்.

அம்மரங்களையெல்லாம் 70 வயதான அர்ச்சுனன் என்பவர் நட்டு, பராமரிப்பு செய்கிறார் என்கிற தகவலையும் தெரிவித்திருந்தார். விவசாயக் கூலியாக இருந்தாலும், மயானத்தில் மரங்களை நட்டு, மரகதச் சோலையாக மாற்றிய அர்ச்சுனன் என்பவரை தலைமைச் செயலாளர் இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பாராட்டி, அவருக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.

மேற்படி மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டி, பாசன நீர் வசதி ஏற்படுத்தி, நன்றாகப் பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டருக்கு நேர்முகக் கடிதமும் அனுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com