13-வது தவணை தொகை பெற வங்கி கணக்கு தொடங்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 13-வது தவணை தொகை பெற வங்கி கணக்கு தொடங்கலாம் என மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்தார்.
13-வது தவணை தொகை பெற வங்கி கணக்கு தொடங்கலாம்
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 13-வது தவணை தொகை பெற வங்கி கணக்கு தொடங்கலாம் என மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

13-வது தவணை தொகை பெற

மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த மாதம் வழங்கப்பட உள்ள 13-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் 3.17 லட்சம் விவசாயிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1047 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரல் ரேகை மூலம் வங்கி கணக்கு

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com