கவியம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்குகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்

கவியம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்குகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவியம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்குகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
Published on

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கவியம் நீர் வீழ்ச்சி உள்ளது. இந்த நீர் வீழ்ச்சிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. தாழ்தொரடிப்பட்டு கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாறைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி வழியாகத்தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் சில நேரங்களில் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்குகளில் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து இறந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் துணை தாசில்தார் ஒருவர் கவியம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனால் கவியம் நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து இறப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை தவிர்க்க கவியம் நீர்வீழ்ச்சியில் உள்ள பள்ளத்தாக்குகளில் தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு சாலை வசதியும் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com