கடல் சீற்றத்தில் சிக்கிக் கொண்ட படகு - கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.
கடல் சீற்றத்தில் சிக்கிக் கொண்ட படகு - கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மாயம்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகியுள்ளனர். கீழக்கரையை சேர்ந்த நான்கு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு அவர்கள் கடல்சீற்றத்தில் சிக்கிக்கொண்டனர்.

கடல் சீற்றம் காரணமாக அவர்களது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கடலில் தத்தளித்த இரு மீனவர்களை சக மீனவர்கள் மீட்ட நிலையில், மற்ற இருவரும் கடலில் மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து மாயமான இரு மீனவர்களையும் தேடும் பணியில் மீனவர்களும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com