

சின்னசேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜி மகன் வீரபாண்டியன் (வயது 26). இவர் சின்னசேலம் அருகே ஈசாந்தை கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். சின்னசேலம் எல்லை அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த சரக்குவாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த வீரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக சரக்கு வாகன டிரைவரான சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை (26) என்பவரை சின்னசேலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.