பேட்மிண்டன் போட்டியில் வென்ற பரிசுத்தொகையில் வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்த சிறுவன்...!

சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
Image Credits: Twitter.com/@cricketbalaji1
Image Credits: Twitter.com/@cricketbalaji1
Published on

சென்னை,

பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தனது வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்த சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்யும் சரோஜா என்ற பெண்ணுக்கு அவரது மகன் செல்போன் வழங்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அவர் அந்த பதிவில், 'எனது மகன் அன்கித் வார இறுதி நாட்களில் நடைபெறும் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று ரூ.7 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார். இன்று அந்த பரிசுத்தொகையில் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்யும் சரோஜா என்ற பெண்ணுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்கி கொடுத்துள்ளார்.

அவர் அன்கித்தை 6 மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே கவனித்து வருகிறார். பெற்றோராக நானும், மீரா பாலாஜியும் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த இணையவாசிகள் சிறுவனை பாராட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com