புறா பிடிக்கச் சென்ற சிறுவன் நீர்த்தேக்கத் தொட்டிக்குள் தவறி விழுந்து தவிப்பு!

50 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புறா பிடிக்கச் சென்ற சிறுவன் நீர்த்தேக்கத் தொட்டிக்குள் தவறி விழுந்து தவிப்பு!
Published on: 

சேலம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் கிஷோர்குமார் (13). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நண்பர்களுடன் புறா பிடிக்கச் சென்ற சிறுவன்

இந்நிலையில், கிஷோர்குமார் தனது நண்பர்களுடன் புறா பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சுமார் 50 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது புறா பிடிப்பதற்காக ஏறியுள்ளார்.

தொட்டிக்குள் தவறி விழுந்து தவிப்பு

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கிஷோர்குமார், நீர்த்தேக்கத் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதனால் அவரால் மேலே வர முடியாமல் தொட்டிக்குள் சிக்கித் தவித்தார். இதைக் கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டு உதவி கோரினர்.

தீயணைப்புத்துறையினர் விரைந்து மீட்பு

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, வாழப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், போராடி நீர்த்தேக்கத் தொட்டிக்குள் சிக்கியிருந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

தொட்டிக்குள் விழுந்ததில் காயமடைந்த கிஷோர்குமார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

X