திருச்சி அருகே திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி அருகே திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி அருகே திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

திருச்சி அருகே திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பெண்

திருச்சியை அடுத்த திருவானைக்காவல் அருகே உள்ள கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ். இவரது மகன் லியோ ஸ்டீபன் (வயது 28). இவருக்கும் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி மகாலட்சுமி நகரை சேர்ந்த டேவிட் என்பவரது மகள் ரபிகா (24) என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணமான அடுத்த நாளில் ரபிகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பெற்றோர் ரபிகாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அவர் எலி பேஸ்ட் (விஷம்) தின்று இருந்தது தெரியவந்தது.

சாவு

ரபிகாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிகிறது. இதனால் அவர் எலிபேஸ்ட்டை தின்றுள்ளார். இதை அவர் யாரிடமும் சொல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த பின்னர்தான் அவர் எலிபேஸ்ட் தின்றது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com