4 வயது குழந்தையை கொம்பால் தூக்கி வீசிய காளை.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 வயது குழந்தையை கொம்பால் தூக்கி வீசிய காளை.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
Published on

அலிகார்,

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த காளை ஒன்று, திடீரென குழந்தையை முட்டி தள்ளியது.

மேலும், குழந்தையை தலையால் தள்ளிக்கொண்டு அங்கேயே படுத்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, தெருவில் சுற்றித் திரிந்த காளையை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com