ஆராய்ச்சி பணிகளுக்காக விடப்பட்டிருந்த பிணந்தின்னி கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் பிணந்தின்னி கழுகு விட்டப்பட்டது.
ஆராய்ச்சி பணிகளுக்காக விடப்பட்டிருந்த பிணந்தின்னி கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Published on

ஊட்டி,

பிணந்தின்னி கழுகு

மராட்டிய மாநிலத்தில் தடோபா அந்தோரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு வளர்க்கப்பட்டு வந்த வெண்முதுகு பிணந்தின்னி கழுகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

பின்னர் கழுகு இடம்பெயர்ந்து கர்நாடக மாநிலம் கல்புர்கி பகுதியில் நடமாடியது. அங்கு அதன் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில், அதனை கர்நாடக வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறிய கழுகை, பிணந்தின்னி கழுகுகள் அடர்த்தியாக வாழும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகம்

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வெண்முதுகு கழுகினை தமிழக, கர்நாடக வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தில் விடுவித்தனர். மேலும் கழுகின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

தென்னிந்தியாவில் வெண்முதுகு கழுகுகளின் கணிசமான எண்ணிக்கையை கொண்டு முதுமலை புலிகள் காப்பகம் விளங்கும் நிலையில், இந்த பறவை மற்ற கழுகுகளுடன் இணைந்து அப்பகுதிக்கு ஏற்றவாறு பழகிக்கொள்ளும் என்ற அடிப்படையில் இங்கு விடுவிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இருப்பினும், கழுகு புதிய சூழலுக்கு பழகாத நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதி, ஊட்டி அருகே உள்ள கல்லட்டி, எப்பநாடு பகுதிகளில் உள்ள மலைச்சரிவுகளில் திரிந்து வந்தது. அந்த கழுகை பிடித்து சீகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

மின்சாரம் தாக்கி...

இந்தநிலையில் எப்பநாடு வனப்பகுதியில் கழுகு சுற்றித்திரிந்த போது மின் கம்பியில் அடிபட்டு, அதாவது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. கழுகு உயிரிழந்ததை வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக வனத்துறையினர், மராட்டிய மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com