சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கார் தீ பிடித்து எரிந்தது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கார் தீ பிடித்து எரிந்தது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கார் தீ பிடித்து எரிந்தது
Published on

சென்னை சென்டிரல் ரெயில் நிலைய கார் பார்க்கிங்கில் நேற்று நிறுத்தப்பட்டிருந்த கார் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வேப்பேரி தீயணைப்பு நிலைய அதிகாரி கே.சி. சரவணன் தலைமையில் வேப்பேரி மற்றும் வண்ணாரபேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சிறிதளவு சேதமடைந்தது. தீ பிடித்த காரின் முன்பகுதி முற்றிலும் நாசமானது.

இது தொடர்பாக நடத்திய முதற் கட்ட விசாரணையில் மாடம்பாக்கம் மாலா ஈஸ்வரி நகரை சேர்ந்த ஆல்வின் வேதாசிங் என்பவரின் கார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சென்டிரல் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காட்சியளித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com