குப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

குப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.
குப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

மதுரவாயல், வள்ளி தெருவில் உள்ள காலி மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனை அங்கிருந்தவர்கள் சுத்தம் செய்வதற்காக தீ வைத்து எரித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குப்பையில் எரிந்த தீ அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் பரவியது.

அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வீடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com