பல்லடம் அருகே ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.! பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல்லடம் அருகே ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.! பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யகனி. இவர், தனது 4 வயது மகள் மற்றும் உறவினருடன் பல்லடம் நோக்கி ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.

பல்லடம் தாராபுரம் சாலை அருகே ஆட்டோ வந்துகொண்டிருந்தபோது, எதிரே கரூர் நோக்கி சென்ற கார் ஒன்று, திடீரென வேகமாக ஆட்டோவின் மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com