குன்றத்தூர் அருகே கொட்டும் மழையில் தடுப்பு சுவரில் மோதிய கார்

குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்ட இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
குன்றத்தூர் அருகே கொட்டும் மழையில் தடுப்பு சுவரில் மோதிய கார்
Published on

குன்றத்தூர்-குமணன்சாவடி சாலையில் சிவன்தாங்கல் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்ட இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் விபத்தில் சிக்கிய காரை ஓட்டி வந்தவர்கள் அங்கிருந்து அவசர, அவசரமாக காரை எடுத்து சென்றுவிட்டனர்.

அந்த காரை ஓட்டி வந்தவர்கள் யார்? குடிபோதையில் காரை ஓட்டி வந்தபோது தடுப்பு சுவரில் மோதியதா? அல்லது மழை பெய்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com