கடலூரில் தாறுமாறாக ஓடிய கார்5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கடலூரில் தாறுமாறாக ஓடிய கார் விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூரில் தாறுமாறாக ஓடிய கார்5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Published on

கடலூர் முதுநகர் காரைக்காட்டை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 38). இவர் விழுப்புரத்தில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இம்பீரியல் சாலை வழியாக காரில் வந்தார். அவர் பூ மாலை வாங்குவதற்காக கடலூர் அண்ணாபாலம் அருகில் காரை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது ஹேண்ட் பிரேக்கை காரில் இருந்த 5 வயது சிறுவன் எடுத்து விட்டான்.

இதனால் அந்த கார் திரும்பி, உழவர் சந்தை வழியாக தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், அந்த காரில் மோதாமல் தள்ளி சென்றனர். நடந்து சென்றவர்கள் காரை பார்த்து அலறி அடித்து ஓடினர். சிறிது நேரத்தில் அந்த கார் அங்குள்ள தடுப்பு கட்டையில் (பேரி கார்டு) மோதி நின்றது. இருப்பினும் காரில் இருந்த சிறுவன் உள்பட 5 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நேற்று மாலை கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து அண்ணா பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அந்த வாலிபர் கீழே விழுந்து காயமடைந்தார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com