திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

திடீரென சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்தது.
திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
Published on

தீப்பற்றி எரிந்தது

பெரம்பலூர் அருகே எளம்பலூர் 1-வது வார்டு கல் ஒட்டர் செட்டியார் தெருவை சோந்தவர் மாரிமுத்து (வயது 57). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று காலை 9.45 மணியளவில் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் சவுபாக்ய விநாயகர் கோவில் அருகே மாரிமுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார்.

அப்போது திடீரென்று பழுது ஏற்பட்டதால் சரக்கு வாகனத்தை அவர் சாலையோரமாக நிறுத்திவிட்டு, மெக்கானிக்கை அழைத்து வரச்சென்றார். இந்த நிலையில் சரக்கு வாகனத்தில் முன்புற என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சில வினாடிகளிலேயே திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.

தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, அருகே உள்ள கோவிலில் இருந்து தண்ணீரை பிடித்து வந்து சரக்கு வாகனத்தின் மீது ஊற்றி தீயை அணைத்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து சரக்கு வாகனத்தின் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com