முன்விரோதத்தில் தாக்கிய 3 பேர் மீது வழக்கு

நிலக்கோட்டை அருகே, முன்விரோதத்தில் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்விரோதத்தில் தாக்கிய 3 பேர் மீது வழக்கு
Published on

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் கூடலரசன் (வயது 39). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி காளீஸ்வரி. இவரது சொந்த ஊர், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குப்பிள்ளைபட்டி ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொக்குப்பிள்ளைபட்டியில் கோவில் திருவிழா நடந்தது. இதில் கூடலரசன் கலந்து கொண்டார். அப்போது திருவிழாவுக்கு வந்திருந்த மதுரையை சேர்ந்த மணிபாரதிக்கும், கூடலரசனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தினால், சம்பவத்தன்று அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு தரிசனத்துக்கு சென்ற கூடலரசன், ரகுபதி, பிரசாந்த் ஆகியோரை மணிபாரதி, மணிமாறன், பிரபாகரன் ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கூடலரசன், ரகுபதி, பிரசாந்த் ஆகியோருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com