நண்பரை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு

மதுகுடிக்க பணம் தராததால் நண்பரை கல்லால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நண்பரை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு
Published on

ஆனைமலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜான் போஸ் (வயது 38), தொழிலாளி. அவர் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே தங்கியிருந்து, கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அமுக்கான் மணி என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

சம்பவத்தன்று இரவில் 2 பேரும் மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது அமுக்கான்மணி குடிபோதையில் ஜான்போசிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமுக்கான் மணி, ஜான் போசை கல்லால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com