தாயை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

வில்லுக்குறி அருகே தாயை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
தாயை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
Published on

திங்கள்சந்தை, 

வில்லுக்குறி அருகே உள்ள கரிஞ்சாங்கோடு ஆசாரிபிலாவிளையை சேர்ந்தவர் ரவி (வயது50). இவரது மனைவி மேரி மார்கிரட் (45). இவர்களது மகன் ஷர்லின் ஜோஸ் (25). இவர்கள் தற்போது இலந்தவிளையில் வசித்து வருகின்றனர். ஷர்லின் ஜோஸ் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று தனது நண்பருடன் மது போதையில் வந்த ஷர்லின் ஜோஸ், தாயார் மேரி மார்கிரட்டிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அவர் தனது நண்பருடன் சேர்ந்து தாயை கையாலும், காலாலும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த மேரி மார்க்கிரட் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மகன் ஷர்லின் ஜோஸ் மற்றும் அவரது நண்பர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com