வாலிபர் மீது வழக்குப்பதிவு

மாணவி கர்ப்பம் ஆன வழக்கில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாலிபர் மீது வழக்குப்பதிவு
Published on

சிவகாசி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தனக்கும், ஒரு வாலிபருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருவதாகவும், வாலிபரை 2 முறை தனிமையில் சந்தித்ததால் கர்ப்பம் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com