எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு

எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது
எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு
Published on

காளையார்கோவில்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கியசாமி, காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், காளையார் கோவிலில் கடந்த 19-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். அப்போது, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர்கள் குறித்து எச்.ராஜா அவதூறாக பேசியதோடு, மத மோதலை உருவாக்கும் நோக்கத்தோடும் பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com