வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு

வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், புதிய வீட்டு குடிநீர் இணைப்புகள், மற்றும் பள்ளி அங்கன்வாடி மையத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்கள், ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடிநீர் அமைச்சகத்தை சேர்ந்த மத்திய குழு அதிகாரிகள் குல்தீப் குமார் பாட்யால், மற்றும் அப்பாராவ், ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்கிற ராஜன், உதவி பொறியாளர் வசுமதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், ஊராட்சி செயலர் திருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக ஊராட்சி மன்றத்தில் நிர்வகிக்கப்படும் குடிநீர் தொடர்பான பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்து குறிப்பு எடுத்து கொண்டனர். இதே போல் ஒரத்தூர், நாட்டரசன்பட்டு போன்ற ஊராட்சிகளிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com