இந்திய அரசியலின் தெளிவான, துணிவான குரல்: கனிமொழிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து


இந்திய அரசியலின் தெளிவான, துணிவான குரல்: கனிமொழிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து
x

பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை,

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் திமுக எம்பி கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசியலின் தெளிவான, துணிவான குரல்களுள் ஒன்றாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான அன்புச் சகோதரி கனிமொழி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து. ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி மற்றும் தமிழ் அடையாளம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story