சாரல் விழாவில் தலையில் கரகம் வைத்த கலெக்டர்

குற்றாலம் சாரல் விழாவில் தலையில் கலெக்டர் கரகம் வைத்தார்.
சாரல் விழாவில் தலையில் கரகம் வைத்த கலெக்டர்
Published on

குற்றாலம் சாரல் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கலைஞர்களை பாராட்டி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பரிசுகள் வழங்கினார்.

அப்போது அந்த கலைஞர்கள் கரகத்தை அவரது தலையில் வைக்க அனுமதி கேட்டனர். உடனே கலெக்டர் ஆகாஷ் அதனை வாங்கி தனது தலையில் வைத்தார். இது அந்த கலைஞர்களை நெகிழச் செய்தது. இதனைப் பார்த்து சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com