மெரினா கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

சென்னை மெரினா கடலில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மெரினா கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்
Published on

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அருண் குமார்(வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-வது ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரோகித் (19) மற்றும் பிரதீப்(19) ஆகியோர் மெரினா கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி மூவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக அங்கிருந்த மெரினா மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடலில் இறங்கி தத்தளித்துக் கொண்டிருந்த ரோகித் மற்றும் பிரதீப்பை பத்திரமாக மீட்டனர். ஆனால் அருண் குமாரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெரினா போலீசார், மீட்கப்பட்ட இருவரையும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கடலுக்குள் மூழ்கி மாயமான அருண்குமாரை, கடலோர காவல்படை உதவியுடன் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com