அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த கல்லூரி மாணவி திடீர் மாயம்

திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த கல்லூரி மாணவி திடீர் மாயம் கடத்தப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை
அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த கல்லூரி மாணவி திடீர் மாயம்
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் மகள் நந்தினி(வயது 22). இவர் கள்ளக்குறிச்சி அரசு கலைகல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் படித்து வருகிறார். நந்தினி நேற்று முன்தினம் அவரது அக்கா சுகன்யாவுடன் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர் வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தும் நந்தினியை காணாததால் உடனே செல்போனில் தனது தந்தையை தொடர்பு கொண்டு நந்தினி காணாமல் போனது குறித்து தெரிவித்தார். பின்னர் இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com