மாணவனை ஆசை வார்த்தை கூறி மயக்கி கடத்தி சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவி - 3 மாத கர்ப்பத்துடன் சிக்கினார்..!

பல ஆண்கள் 30 வயதை கடந்த போதிலும் திருமணத்திற்காக காத்து கொண்டிருக்கும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரை கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனை ஆசை வார்த்தை கூறி மயக்கி கடத்தி சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவி - 3 மாத கர்ப்பத்துடன் சிக்கினார்..!
Published on

சேலம்,

90ஸ் கிட்ஸ் பலரும் கல்வி கடன், குடும்ப பாரம் உள்ளிட்ட காரணங்களால் 30 வயதை கடந்த போதிலும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் அருகே சிறுவனை கடத்திச் சென்று திருமணம் செய்து தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவியை போக்சோ சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டில் சேர்ந்தவர் சூர்யா (18), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் 6ம்தேதி டூவீலரில் கல்லூரிக்கு சென்ற சூர்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேடினர். முடிவில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெற்றோர் ஆட்கொணர்வு மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து சூர்யாவுடன் நட்பாக இருந்தது யார்? என போலீசார் விசாரினையில் இறங்கினர். அவர் யாரிடமும் அதிகமாக பேசமாட்டான் என நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் பேலீசாரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் சூர்யா இருப்பதை கண்டுபிடித்தனர். அவருடன் இருந்த இளம்பெண்ணையும் பிடித்து விசாரித்தபோது, அப்பெண்ணின் பெயர் சாந்தி (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், சூர்யாவுடன் படித்ததும், இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதும் தெரியவந்தது.

இதையடுத்து சூர்யாவையும், சாந்தியையும் பிடித்து போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலில் விழுந்தது தெரியவந்தது. சூர்யாவின் அழகில் சாந்தி மயங்கினார் என்றும் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என ஆசை வார்த்தை கூறி மாணவனை மாணவி கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அந்நேரத்தில் சூர்யாவுக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்தது. காதலில் விழுந்த இருவருக்கும் வயது கண்ணை மறைத்து விட்டது. சாந்தியின் அழைப்பை ஏற்று சூர்யா, கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, சாந்தியுடன் பறந்துள்ளார்.

பேரிகையில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்தது. சூரியா வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் அவர் சிறுவன். எனவே சிறுவனை கடத்திச்சென்று திருமணம் செய்த சாந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம், சிறுவனை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாந்தி 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com