அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைப்பு


அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைப்பு
x

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story