சிறப்பு கிராம சபை கூட்டம் திடீரன ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு

கடையம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் திடீரன ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறப்பு கிராம சபை கூட்டம் திடீரன ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு
Published on

கடையம்:

கடையம் யூனியன் பெரும்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியில், ஊர் பெயரை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறி மேட்டூர் பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மயானத்தில் குடியேறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் அந்தியோதயா சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கிராமசபை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரன், சுரேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக பெரும்பத்து சிறப்பு கிராமசபை கூட்டத்தை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன், அங்கு வந்திருந்த மக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com